Jacksonville Tamil Mandram, Florida

ஜாக்ஸன்வில் தமிழ் மன்ற நிகழ்வுகள்!

நினைத்தாலே நடக்கும் – நாடகம் – Drama Nov09-2008

Posted by jaxtamil on October 19, 2008

வணக்கம் தமிழ் அன்பர்களே,

ஜாக்ஸன்வில் தமிழ் மன்றம் இந்த ஆண்டின் சிறப்பு நிகழ்ச்சியாக அவதார்ஸ் குழுவினரின் “நினைத்தாலே நடக்கும்” நகைச்சுவை நாடகம் வழங்குகிறோம். நாடகத்திற்கு உங்கள் அனைவரையும் வருக வருக என்று இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.

நாள்: நவம்பர் 9, 2008 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மதியம் 12 மணி.
இடம்: லேன்ட்மார்க் நடுநிலைப் பள்ளி.

நிகழ்ச்சி விபரங்கள்
மதிய உணவு: 12:00 – 1:30 (இலவசம்)
நாடகம்:              1:30 – 4:00 (கட்டணம்)
சிற்றுண்டி:         4:00
நிறைவு:             5:00

கட்டணம் விபரங்கள்
நபருக்கு,
$50 – கொடை வள்ளல்.
$25 – வள்ளல்.
$10 – மன்ற உறுப்பினர்கள்.
$20 – உறுப்பினர் அல்லாதோர்.
$10 – மாணவர்களுக்கு (அடையாள அட்டை வேண்டும்)

தங்கள் அன்புள்ள,
இரா.பத்பநாபன்.
செயலர் 2008 செயற்குழு.


Dear Tamil friends,

As a special program for this year, Jacksonville Tamil Mandarm is hosting hilarious Tamil Drama “Ninaithale Nadakkum” from The Avatars art group. We Cordially invite you with family and friends for this Annual Day Celebration.

Date:  November 9, 2008 Sunday
Time: 12:00 noon.
Venue:landmark Middle School, 101 Kernan Blvd N, Jacksonville FL 32225.

Program details
Annual Day Lunch :  12 pm to 1:30 PM (Free)
Comedy Drama:        1:30    to 4:00 PM (Ticketed)
Coffee & Snacks       4:00 PM
Windup:                    5:00 PM

Tickets
$50/person-  Kodai Vallal
$25/person - Vallal
$10/person- Member
$20/person – Non-member
$10/person- Student with valid ID

Sincerely,
Padmanaban Ramalingam
Secretary 2008 EC.

Posted in அறிவிப்பு - notice | Leave a Comment »

செயற்குழு தேர்தல் – EC Election – 10/25/2008

Posted by jaxtamil on October 19, 2008

அன்பார்ந்த தமிழ் மக்களே,

வரும் அக்டோபர் 25ம் தேதி, பொதுக்குழு கூடி அடுத்த ஆண்டு செயற்குழு பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. நீங்கள் அனைவரும் வந்திருந்து ஆதரிக்க வேண்டுகிறோம்.

நாள்: அக்டோபர் 25, 2008 – சனிக்கிழமை.
நேரம்: மாலை 2 மணியிலிருந்து 5 மணி வரை.

இடம்: UNF. அறை எண்1116. காகின் கல்லூரி வர்த்தகக் கட்டிடம்.

நிகழ்ச்சி நிரல்.
தலைவர் வரவேற்பு உரை.
பொருளாளர் அறிக்கை.
ஆண்டு நிலவரம்.
தேர்தல்.
கலந்துரையாடல்.

Dear Jax Tamilians,

On October 25 we are conducting the election of Executive commity posts for year 2009. We kindly request you all to attend the meeting and provide your valuable suggestions.

Date: October 25, 2008 – Saturday
Time: 2:00 to 5:00 PM
Venue: UNF. Room Number 1116, College of Business Building.

Agenda
Welcome Address by President
Treasurer Report
Status and Overview of the Year
Elections
Open Discussion

Posted in அறிவிப்பு - notice | Leave a Comment »

நகச்சுவை நிகழ்ச்சி ஜூலை 18 – July 18 2008

Posted by jaxtamil on July 13, 2008

Posted in அறிவிப்பு - notice | Leave a Comment »

யாரடி நீ மோகினி திரைப்படம் – Yaradi Nee Mohini movie 04/27/2008 Sunday 12:00 PM

Posted by jaxtamil on April 12, 2008

வணக்கம் நண்பர்களே,

இந்தப் படம் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. படம் வரும் ஏப்ரல் 27ம் தேதி ஞாயிறு அன்று சன்மார்க்கோ அரங்கில் திரையிடப்படுகிறது. அனைவரும் வாரீர்.

வலையில் ஒரு விமரிசனப் பார்வை http://tamil.cinesouth.com/scopes/reviews/new/yaaradineemohini.shtml
இப்படிக்கு,
பத்மநாபன்
செயலர்

Dear friends,

This movie has received good review. It will be screened in San Marco theatre on April 27th Sunday. Enjoy the show.

Sample review in the web http://tamil.cinesouth.com/scopes/reviews/new/yaaradineemohini.shtml

Visit our website: http://www.jaxtamilmandram.org/

Premium Member: Free admission

Individual Member $ 7.00
Non member        $10.00

Thank you,
R. Padmanaban
Secretary

Posted in அறிவிப்பு - notice | Leave a Comment »

தமிழ் புத்தாண்டு விழா அழைப்பிதழ் – Tamil newyear program invitation

Posted by jaxtamil on April 12, 2008

Posted in அறிவிப்பு - notice | Leave a Comment »

நன்றி – விளையாட்டு தினம். Thanks note – JTM Sports Day

Posted by jaxtamil on March 31, 2008

prize.jpg

அன்பார்ந்த தமிழ்மன்ற அங்கத்தினர்களே,

நேற்று விளையாட்டு தினம் உங்கள் ஏகோபித்த ஆதரவுடன் சிறப்பாக நடந்தேறியது.

சுமார் 70 பெரியவர்களும் 60 குழந்தைகளும் பங்குபெற்றனர்.

சிறார்களுக்கான நடந்த போட்டிகள்:
1. 100 மீட்டர் ஓட்டப் பந்தயம்
2. எலுமிச்சை கரண்டி பந்தயம்
3. நொண்டி பந்தயம்
4. தவளை போட்டி

பெரியோர்களுக்கான போட்டிகள்:
1. 400 மீட்டர் ஓட்டப் பந்தயம்.
2. எலுமிச்சை கரண்டி பந்தயம்

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. பங்குபெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆடவர் கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பந்து எறிதல் போட்டியில் வெற்றிபெற்ற மகளிருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டிகளோடு, கயிறு இழுத்தல், கிரிக்கெட் போன்று பல விளையாட்டுகளும் நடை பெற்றன. இதமான தட்பநிலை நிலவி குடும்பத்தினர் அனைவரும் கூடி விளையாடிய நினைவில் கொள்ளும்படியான நாளாக அமைந்தது.

சிற்றுண்டி வகைகளும் தாராளமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சுவையான சிற்றுண்டி வகைகள் தயாரித்துவழங்கிய நண்பர்களுக்கு நாங்கள் சிறப்பு மரியாதை தரக் கடமைப்பட்டுள்ளோம்.

சுனந்தா குஜார், மாயா பாலா – பாவ் பாஜி மசாலா
பட்ரீசியா சந்திரசேகர், ராஜேஷ்வரி ஜகதீஷ் – பக்கோடா

நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பித்த அனைவருக்கும் எங்கள் உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி
இவண்.
இரா.பத்மநாபன்
செயலர்


Dear JTM members,The Sports Day event conducted yesterday was a big hit with your enthusiastic support.

About 70 adults and 60 kids showed up and almost everyone took part in at least one the sport/game.
The sports conducted for kids were
1. 100/200 M dash
2. Lemon and spoon race
3. Hopping
4. Frog race
The sports conducted for adult were
1. 400 M dash
2. Lemon and spoon race
The winners were awarded with trophies and all participant kids were awarded with prizes. The Volleyball (men) and Throw Ball (ladies) winners and runners were awarded with Trophies.
Members played Dodge Ball, Tug-of-war, Cricket (juniors), Throw ball (Ladies) and Volley ball (men). The weather was very pleasant and everyone enjoyed and had real fun.

Delicious snack were served. The members who prepared the food items deserve special appreciations.

Sunanda Guzzar one big tray, Maya Bala – Bajji Masala

Patricia Chandrasekar one big tray, Rajeswari Jagadesh – Pakoda

We thank you all for making the day a memorable day of quality family time for everyone.

Thank you,
Yours sincerely,
R. Padmanaban
JTM Secretary.

Posted in அறிவிப்பு - notice | Leave a Comment »

பிரிவோம் சந்திப்போம் – Pirivom Santhipom 03/01/08

Posted by jaxtamil on February 22, 2008

pirivomsanthipom.png

அன்புத் தமிழர்காள்,

உங்களுக்காக பொங்கல் வெளியீடு
சேரன், சினேகா நடித்த
பிரிவோம் சந்திப்போம்
திரைப்படம் வரும் மார்ச் 1 சனிக்கிழமை மதியம் 12:00க்கு சான்மார்கோ அரங்கில் திரையிடப்பட உள்ளது.
இசை: வித்யாசாகர்.
இயக்கம்: கரு.பழனியப்பன்

அனைவரும் வருக!.
இப்படிக்கு,
இரா.பத்மநாபன்
செயலர்.

Dear Tamil enthusiasts,

Pongal release movie
Pirivom Santhipom
starring Cheran and Sneha will be screened on March 1st Saturday 12:00 noon in San Marco theatre.

Enjoy the show.

Thank you,
R. Padmanaban
Secretary
Premium Member:   Free admission
Individual Member $ 7.00
Non member        $10.00
Directions to San Marco theatre 1996 San Marco Blvd Jacksonville, FL 32207.
From Baymeadows Southside blvd intersection.
 1 Baymeadows Rd West toward Philips High Way 4 miles
 2 Turn right at San Jose Blvd                          7 miles
 3 Turn left at San Marco Blvd                       121 ft
 Theatre is on the left side. Total distance ~11 miles.

Posted in அறிவிப்பு - notice | Leave a Comment »

நூலகம் – libraray Info

Posted by jaxtamil on February 20, 2008

அன்பார்ந்த தமிழ்மன்ற உறுப்பினர்களே,

நம் நூலகத்தில் கீழ்க்கண்ட புத்தகங்கள் புழக்கத்தில் உள்ளன. புத்தகம் வேண்டுவோர் திருமதி அருணா சுப்ரமணியம் அவர்களை அணுகவும். தொலை பேசி எண்: 904-386-2938.

வாரம்தோறும் சனிக்கிழமை அன்று கிரீன்-லான்ட் சாலையில் உள்ள இந்துக் கோவிலில் 9:30 – 10:30 மணிக்கு அவரை நேரில் சந்தித்தும் புத்தகங்களை மாற்றிக்கொள்ளலாம்.

1. தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
2. அம்மா வந்தாள்
3. ஜஸ்டிஸ் ஜகன்நாதன் பாகம் 1 & 2
4. துப்பறியும் சாம்பு பாகம் 1 & 2
5. தமிழ் எழுத்து பயிற்சி பாகம் 1,2,3,4 & 5
6. கள்ளிக்காட்டு இதிகாசம்
7. சுஜாதாவின் சிறுகதை தொகுப்பு பாகம் 1 & 2
8. பொன்னியின் செல்வன் பாகம் 2, 3 & 4
9. அலை ஓசை
10. சிவகாமியின் சபதம்
11. புதுமைப்பித்தன் கதைகள்
12. விஷ்ணுபுரம்
13. அசோகமித்ரன்கதைகள் பாகம் 1 & 2
14. புறநானூறு மூலம்
15. பார்த்திபன் கனவு
16. கோணல் பக்கங்கள் பாகம் 2
17. அகநானூறு பாகம் 1, 2 & 3
18. மானுடம் வெல்லும்
19. வானம் வசப்படும்
20. திருக்குறள் உரை – சுஜாதா
21. உப பாண்டவம் – இராமகிருஷ்ணன்.
22. பல தேசத்து கதைகள்.
23. பாலங்கள்
24. கொன்றை வேந்தன் கதைகள்.
25. ஆத்திச்சூடி கதைகள்
26. அர்த்தமுள்ள இந்துமதம்
27. மழலை மத்தளம்
28. மரியாதை ராமன் கதைகள்
29. விக்ரமாதித்தன் கதைகள்.
30. விடியாத இரவுகள்
31. நேநோ – சாருநிவேதிதா
32. கம்ப ராமாயணம் பாகம் 1 – 9
33. கீதாஞ்சலி
34. எழுத்தும் வாழ்க்கையும்
35. கந்த புராணம்
36. அக்னி சிறகுகள்.
37. தி.ஜானகிராமன் படைப்புகள் பாகம் 1 & 2
38. ராஜ யோகம்
39. வேங்கையின் மைந்தன்
40. பாரதியார் கதைகள்.
41. மணி பல்லவம்
42. பதவிக்காக

நன்றி,
இரா.பத்மநாபன்.
செயலர்.

Posted in அறிவிப்பு - notice | Leave a Comment »

GBM – blog பொதுக்குழுக்கூட்டம் – பதிவுகள் – இலக்கியவட்டம்

Posted by jaxtamil on February 17, 2008

சிறப்பு பட்டி மன்றம்:

sarnath_lion_capital_of_ashoka.jpgliberty.jpg


இளைய தலைமுறைக்கு உகந்தது இந்தியாவா அமெரிக்காவா?

நடுவர்: திரு. வெங்கடேசன் முத்தையா அவர்கள்.

இந்தியாவே       அமெரிக்காவே
கிருஷ்ணக்குமார்   ஞானம்

செந்தில்குமார்      பத்மநாபன்

சாந்தி ரவிக்குமார்  பாலா

இடம்: UNF ஸ்டீன் கலையரங்கம். அறை எண்1020. கட்டிடம் இலக்கம் 42, காகின் கல்லூரி வர்த்தகக் கட்டிடம்.

நாள்: பிப்ரவரி 23, சனிக்கிழமை

காலம்: 2:00 லிருந்து 4:00 வரை – பொதுக்குழுக் கூட்டம்,

4:00 லிருந்து 5:00 வரை – பட்டிமன்றம்

அனைவரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உங்கள் மேலான கருத்துக்களை எடுத்துச் சொல்லுங்கள். வழக்குரையாடுவோருக்கு உற்சாக மூட்டினால் அவர்களுக்கு பெரும் மேடைகளில் பேச இந்த வாய்ப்பு ஒரு படிக் கல்லாக அமையும்.

மின் அஞ்சலில் வெளியாகும் செய்திகள் இணைய தளத்திலும் பதியப்படுகின்றன. இந்த பதிவில் சேர்க்க உங்களுடைய பங்களிப்பையும் வரவேற்கிறோம். கிருஷ்ணக்குமார் சிறப்பாக நடத்தி வந்த “கதிரவன்” இதழின் ஆக்கங்களை இந்த பதிவின் வாயிலாக தொடர்கிறோம். நீங்கள் உங்களுடைய கட்டுரை, கதை, கவிதைகள், நகைச்சுவை போன்ற இலக்கியப் படைப்புகளை வழங்கி ஆதரியுங்கள். எனக்கு அவற்றை தனி மடலில் அனுப்புங்கள். இடுகைகள் புதுப்பிக்கப்பட்ட உடன் செய்தியை மடற்குழுவில் பகிர்ந்து கொள்வோம்.

 

Special Debate:

India or America, which is better for the younger generation?

Judge: Tiru. Venkatesan Muthaiah.
India              America
Krishnakumar       P.K.Gnanam
Senthilkumar       Padmanaban
Shanthi Ravikumar  Bala. P. V

Venue: UNF Stein Auditorium, Room 1020. Auditorium is in building 42, Coggin College of Business Building

Date: February 23rd, Saturday

Time: 2:00 to 4:00 PM – GBM

4:00 to 5:00 PM – Debate

Please provide your valuable comments in the GBM and your encouragement will prepare the debaters for greater events.

The email notifications are also blogged in the web. We welcome your contributions to include in the blog. Kathiravan magazine published very well by Krishnakumar and it will be continued in the blog form. Please send in your creations of articles, stories, poems, jokes, etc. to include in the blog. Send them through personal mail. We shall announce the blog updates to the group.

இலக்கிய வட்டம்.

முதலில் குறுந்தொகை அறிமுகம்: (காயத்ரியின் பதிவிலிருந்து)

கணவன் வேலைக்காக வெளியூர் சென்றுவிட அவன் பிரிவால் வாடும் மனைவி…
“பூ இடைப்படினும் ஆண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போல….”

என்று கணவனுடனான தன் நெருக்கத்தையும் பிரிவுத்துயரையும் சொல்கிறாள்.

மகன்றிற் பறவை (அன்றிற் பறவையாகவும் இருக்கலாம்!) என்பது எப்போதும் தன் இணையோடு சேர்ந்து நீரில் நீந்திக் கொண்டிருப்பது. அப்படி நீந்தி வருகையில் இரண்டு பறவைகளுக்குமிடையில் நீரில் பூத்திருக்கும் தாமரையோ அல்லியோ அல்லது ஏதேனுமொரு நீர்ப்பூவோ எதிர்ப்படுமானால் அந்தப் பூவைச் சுற்றிவந்து மீண்டும் இணையும் சிறு பொழுதிற்கு இரண்டு பறவைகளும் ஓராண்டு பிரிந்தது போலத் தவித்திருக்கும்… அப்பறவையை போன்றவள் தான் நானும் என்கிறாள்!

அவர்கள் போலவே இலக்கிய வட்டம் கூடி சிலகாலம் ஆகியிருந்தாலும், இலக்கிய ஆர்வலர்கள் இந்த பதிவின் மூலம் மீண்டும் சந்திக்கலாம். உங்கள் பங்களிப்பை ஏதேனும் செய்யுள்களுக்கு விளக்க உரை எழுதினால் அனைவருக்கும் பயன்படும் என்பது என் எண்ணம். சிறுதுளி பெருவெள்ளம். உரையாடலை ஒரு பதிவிலோ தனி மடலிலோ தொடர்வோம்.

நன்றி.

பத்மநாபன்.

2008 மன்ற செயலர்

Posted in அறிவிப்பு - notice | Leave a Comment »

பீமா – Bheema திரைப்படம் 01/26/2008

Posted by jaxtamil on January 20, 2008

ஜாக்ஸன்வில் தமிழ் மன்றம் இணைந்து வழங்கும்,

சீயான் விக்ரம், த்ரிஷா நடித்த திரைப்படம்

பீமா

Jacksonville Tamil Mandram jointly presents,

Starring Vikram and Trisha

Bheema

ஜனவரி 26 அன்று சான்மார்க்கோ அரங்கில் வெளியாகிறது.

on January 26 2008 at SanMarco theater.

Beema poster

Posted in திரைப்படம் - movie | Leave a Comment »