Jacksonville Tamil Mandram, Florida

ஜாக்ஸன்வில் தமிழ் மன்ற நிகழ்வுகள்!

GBM – blog பொதுக்குழுக்கூட்டம் – பதிவுகள் – இலக்கியவட்டம்

Posted by jaxtamil on February 17, 2008

சிறப்பு பட்டி மன்றம்:

sarnath_lion_capital_of_ashoka.jpgliberty.jpg


இளைய தலைமுறைக்கு உகந்தது இந்தியாவா அமெரிக்காவா?

நடுவர்: திரு. வெங்கடேசன் முத்தையா அவர்கள்.

இந்தியாவே       அமெரிக்காவே
கிருஷ்ணக்குமார்   ஞானம்

செந்தில்குமார்      பத்மநாபன்

சாந்தி ரவிக்குமார்  பாலா

இடம்: UNF ஸ்டீன் கலையரங்கம். அறை எண்1020. கட்டிடம் இலக்கம் 42, காகின் கல்லூரி வர்த்தகக் கட்டிடம்.

நாள்: பிப்ரவரி 23, சனிக்கிழமை

காலம்: 2:00 லிருந்து 4:00 வரை – பொதுக்குழுக் கூட்டம்,

4:00 லிருந்து 5:00 வரை – பட்டிமன்றம்

அனைவரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உங்கள் மேலான கருத்துக்களை எடுத்துச் சொல்லுங்கள். வழக்குரையாடுவோருக்கு உற்சாக மூட்டினால் அவர்களுக்கு பெரும் மேடைகளில் பேச இந்த வாய்ப்பு ஒரு படிக் கல்லாக அமையும்.

மின் அஞ்சலில் வெளியாகும் செய்திகள் இணைய தளத்திலும் பதியப்படுகின்றன. இந்த பதிவில் சேர்க்க உங்களுடைய பங்களிப்பையும் வரவேற்கிறோம். கிருஷ்ணக்குமார் சிறப்பாக நடத்தி வந்த “கதிரவன்” இதழின் ஆக்கங்களை இந்த பதிவின் வாயிலாக தொடர்கிறோம். நீங்கள் உங்களுடைய கட்டுரை, கதை, கவிதைகள், நகைச்சுவை போன்ற இலக்கியப் படைப்புகளை வழங்கி ஆதரியுங்கள். எனக்கு அவற்றை தனி மடலில் அனுப்புங்கள். இடுகைகள் புதுப்பிக்கப்பட்ட உடன் செய்தியை மடற்குழுவில் பகிர்ந்து கொள்வோம்.

 

Special Debate:

India or America, which is better for the younger generation?

Judge: Tiru. Venkatesan Muthaiah.
India              America
Krishnakumar       P.K.Gnanam
Senthilkumar       Padmanaban
Shanthi Ravikumar  Bala. P. V

Venue: UNF Stein Auditorium, Room 1020. Auditorium is in building 42, Coggin College of Business Building

Date: February 23rd, Saturday

Time: 2:00 to 4:00 PM – GBM

4:00 to 5:00 PM – Debate

Please provide your valuable comments in the GBM and your encouragement will prepare the debaters for greater events.

The email notifications are also blogged in the web. We welcome your contributions to include in the blog. Kathiravan magazine published very well by Krishnakumar and it will be continued in the blog form. Please send in your creations of articles, stories, poems, jokes, etc. to include in the blog. Send them through personal mail. We shall announce the blog updates to the group.

இலக்கிய வட்டம்.

முதலில் குறுந்தொகை அறிமுகம்: (காயத்ரியின் பதிவிலிருந்து)

கணவன் வேலைக்காக வெளியூர் சென்றுவிட அவன் பிரிவால் வாடும் மனைவி…
“பூ இடைப்படினும் ஆண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போல….”

என்று கணவனுடனான தன் நெருக்கத்தையும் பிரிவுத்துயரையும் சொல்கிறாள்.

மகன்றிற் பறவை (அன்றிற் பறவையாகவும் இருக்கலாம்!) என்பது எப்போதும் தன் இணையோடு சேர்ந்து நீரில் நீந்திக் கொண்டிருப்பது. அப்படி நீந்தி வருகையில் இரண்டு பறவைகளுக்குமிடையில் நீரில் பூத்திருக்கும் தாமரையோ அல்லியோ அல்லது ஏதேனுமொரு நீர்ப்பூவோ எதிர்ப்படுமானால் அந்தப் பூவைச் சுற்றிவந்து மீண்டும் இணையும் சிறு பொழுதிற்கு இரண்டு பறவைகளும் ஓராண்டு பிரிந்தது போலத் தவித்திருக்கும்… அப்பறவையை போன்றவள் தான் நானும் என்கிறாள்!

அவர்கள் போலவே இலக்கிய வட்டம் கூடி சிலகாலம் ஆகியிருந்தாலும், இலக்கிய ஆர்வலர்கள் இந்த பதிவின் மூலம் மீண்டும் சந்திக்கலாம். உங்கள் பங்களிப்பை ஏதேனும் செய்யுள்களுக்கு விளக்க உரை எழுதினால் அனைவருக்கும் பயன்படும் என்பது என் எண்ணம். சிறுதுளி பெருவெள்ளம். உரையாடலை ஒரு பதிவிலோ தனி மடலிலோ தொடர்வோம்.

நன்றி.

பத்மநாபன்.

2008 மன்ற செயலர்

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>